பொருளாதாரத்தை அழிப்பவர்களிடமிருந்து நாட்டை பாதுகாப்போம்!

Monday, July 18, 2011

மக்கள் வங்கி பொன்விழா வைபவத்தில் ஜனாதிபதி
அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியவர்களாலேயே கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.
மக்கள் வங்கியை வங்குரோத்து நிலை அரச நிறுவனமாக்கி அவற்றை மூடிவிடுவதற்குத் திட்டமிட்டவர்களும் அவர்களே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் 50வது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா தேசிய நிகழ்வூ நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள்  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது
மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் ரி. பி. இலங்கரட்ண- பிலிப் குணவர்தன ஆகியோரின் அர்ப்பணிப்புடனான செயற்பாட்டின் மூலமே மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது என்பதை நினைவூகூர விரும்புகிறேன்.
வங்குரோத்து நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த நிறுவனமாக மக்கள் வங்கியை மாற்றியே 50 வருட நிறைவூ இன்று நினைவூகூரப்படுகிறது. எதிர்வரும் 50 வருடங்களில் மக்களின் தேவை உணர்ந்து எதிர்காலத்துக்குப் பொருத்தமான சிறந்த சேவையை வழங்குவதற்கு மக்கள் வங்கி திடசங்கற்பம் பூணுவது அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த 50 வருடங்களில் மக்கள் வங்கி பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகளை நினைவூகூரும் இத்தருணத்தில் எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரத்துக்கு அதனூடான பங்களிப்புப் பற்றியூம் குறிப்பிடவேண்டியூள்ளது.
பொருளாதாரத்தை அழிப்பவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் நீண்டபயணம் செல்லவேண்டியூள்ளது. அவர்கள் தினமும் முழு நாட்டையூம் விற்றுத் தின்பதற்கு பார்த்துக்கொண்டிருக் கின்றனர். இன்றௌ நாளையோ நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடுமென்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உலகப் பொருளாதாரம் சீர்குலைந்து வங்கித் துறை வீழ்ச்சியூற்று தொழிலின்றி வீழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் நாம் எமது வங்கித்துறையை இந்தளவூக்குக் கட்டியெழுப்பியூள்ளமை எமது பெரும் பலமாக அமைந்துள்ளது. எதிர்வரும் 50 வருட காலத்தில் மக்களோடு நெருங்கிய தொடர்புள்ள வங்கியாக மக்கள் வங்கியைக் கட்டியெழுப்புவதற்கு அதன் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதி தனது உரையில் மேலும் தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets