தமிழ் அரசியல்வாதிகள் கிழக்கின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!

Monday, July 18, 2011

ஸ்ரீல. சு. க.வின் மட்டக்களப்பு அமைப்பாளர் விளக்கம்
காணி- பொலிஸ் அதிகாரங்களை கிழக்கு மாகாண சபைக்கு வழங்குமாறு கோரும் தமிழ் அரசியல்வாதிகள்- எதிர் வரும் காலங்களில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தமிழ் கட்சிகள் மாத்திரமே கைப்பற்றுவார்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்வார்கள்? அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருள் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர் பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மையில் நான் பத்திரிகைகளுக்கு வழங்கிய செவ்வியின் காரணமாக தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாவரின் கருத்துக்கும் முக்கியமாக மாற்றுக் கருத்துடையோரின் கருத்துக்கும் நான் மதிப்பளிப்பவன் என்ற முறையில் மீண்டும் ஒருமுறை கிழக்கின் அரசியல் யதார்த்தத்தை உங்கள் முன் எதிர்வூகூற கடமைப்பட்டுள்ளேன்.
ஒருங்கிணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணமாக இல்லாது கிழக்கு மாகாண சபை தனித்து இயங்கும் வேளையில்இ ஆட்சி தமிழரிடம் இருந்து கைமாறினால் அதன் பிரதிபலன்கள் எவ்வாறு தமிழ் சமூகத்தை பாதிக்கும் என்பதை சிந்தித்து தங்கள் கூற்றுக்களை முன் வைக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டாலே யொழிய பொலிஸ்- காணி- அதிகார பரவலாக்கல் கிழக்கு வாழ் தமிழ் சமூகத்திற்கு குந்தகமாகவே அமையூம். இவ்விடயத்தில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் தௌpவற்ற நிலையில் இருப்பது அவர்களின் அரசியல் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
கிழக்கு மாகாணத்தில் 1950 களில் தமிழர் விகிதாசாரம் 70 வீதமாக காணப்பட்டது. பின் காலப் போக்கில் இவ் விகிதாசாரம் தேய்வடைந்து 40 வீதத்திற்கும் குறைவான நிலையை எட்டியூள்ளது.
இவ்வேளையில் தமிழ் கட்சிகள் யாவூம் ஒரு குடையின் கீழ்போட்டியிட்டாலும் ஆட்சியமைக்கக் கூடிய பலத்தை பெற முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எமது அண்டை நாடோ அல்லது பிற நாடுகளோ எமக்கு கரம் தந்து தமிழ் சமூகத்திற்கு ஓர் தீர்வை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை எமது பகுத்தறிவை பாவித்து யதார்த்தத்தை அலசி ஆராய்ந்து நோக்க வேண்டும்.
என்றும் போல் இந்தியாவின் ஊடாக தமிழர்களுக்கு ஒரு தீர்வூ வரும் என்று அடிப்படையற்ற ஒரு கூற்றை தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை கொள்கை ரீதியில் பகி~;கரித்த பொழுது அத் தேர்தலில் போட்டியிட்ட குழுக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் ஒரு நிலையற்ற கொள்கையையே பின்பற்றி வந்துள்ளது.
இன்று தமிழ் மக்களின் தேவை உரிமைகளா? சலுகைகளா? என்று கணக்கிட்டு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் நிற்கிறௌம். இவ்வேளையில் நாம் நமது உரிமைகளுக்காக எடுக்கின்ற முயற்சிகளோடு எம்மால் முடியூமானவரை அரசாங்கத்தினூடாக பெறக்கூடிய உச்ச மட்ட சலுகைகளையூம்- எமது மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
இதை முன்னெடுக்கவே அரசுடன் இணைந்து என்னால் கூடுமானவரை இம் முயற்சியில் வெற்றிகொள்ள நோக்குகிறேன்.
சில பத்திரிகைஇ இலத்திரனியல் ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவாறு சுய நலமோ பிற அபிலாi~களோ- இதில் கலக்கப்படவில்லை ஏனெனில் நான் இவற்றில் தங்கி என் அரசியல் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டிய நிலை இன்றுவரை எனக்கு ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

0 comments:

IP
Blogger Widgets