அச்சத்தில் விமான கட்டணங்கள் குறைப்பு
சீனா நவீன அதி வேக புல்லட் ரயிலை நேற்று அறிமுகம் செய்தது. சீனாவின் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே நேற்று முதல் பயணத்தை துவக்கியது.
இதற்கு போட்டியாக விமான நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்துள்ளன.
சீனாவின் தொலை தூரங்களை இணைக்கும் வகையில் 2020ம் ஆண்டிற்குள் 16 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக உலகிலேயே அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் பீஜிங் - ஷாங்காய் இடையில் 1318 கி.மீ. தூரத்திற்கு முதல் பயணத்தை நேற்று துவக்கியது.
10 மணி நேரத்தில் அடைய வேண்டிய தூரத்தை இந்த ரயில் 5 மணி நேரத்தில் சென்றடையும்.சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கி 90வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment