நீதிமன்றம் செல்ல ஏற்பாடு
தனியார் பஸ் கட்டண அதிகரிப்புக் கோரிக்கையை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் நடத்தப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண அறிவித்துள்ளார்.
பயணிகளின் நன்மை கருதி வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்ட போதிலும் தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சரினால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறி அடுத்தவாரமளவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜுலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் பஸ் கட்டணங்கள் 7.6 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கெமுனு விஜேரட்ண தமது சங்கத்தினர் ஏற்கனவே முன்வைத்திருந்த கோரிக்கையின்படி தனியார் பஸ் கட்டணங்களில் 15.5 சதவீத அதிகரிப்பு வேண்டுமெனவும் இல்லையேல் இன்று (27) நாடளாவிய ரீதியில் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment