தலிபான்களின் உயர் தலைவர் முல்லா ஓமர் மரணம் அடைந்ததாக வந்த தகவல் தவறு என தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாகித் கூறினார்.
தங்களது தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் இணையதளத் தகவல்கள் திருடப்பட்டு புதன்கிழமை முல்லா ஓமர் மரணம் அடைந்தார் என தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.
முல்லா ஓமர் உலக அளவில் தேடப்படும் தீவிரவாத தலைவர் ஆவார். இவர் பாகிஸ்தான் குவெட்டா நகரில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் அரசும் தலிபான்களும் கூறுகிறார்கள்.
அமெரிக்க உளவுத்துறையினரின் சதியால் எங்களது தகவல்கள் களவாடப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களை பழிவாங்குவோம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா எச்சரித்தார்.
சபிபுல்லா முஜாகித் மற்றும் தலிபான் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் முகமது காரி யூசுப் ஆகியோரின் தொலைபேசி நம்பர்களில் முல்லா முகமது ஒமர் இறந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் என்ற தகவல் வந்தது.
தங்களது தொலைபேசி விடயங்களை திருடி தவறான பிரசாரத்தை நேட்டோ செய்வதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாகித் கூறினார்.
முல்லா ஓமர் இறக்கவில்லை: தலிபான்களின் எச்சரிக்கை அறிவிப்பு
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment