மரண தேவதை என்றழைக்கப்படும் நாஜியின் டைரி ஏலம்

Wednesday, July 20, 2011

நாஜி படையில் மரண தேவதை என அழைக்கப்பட்ட போர் கிரிமினல் ஜோசப் மெங்கிலேவின்  டைரிகளை அமெரிக்க ஏல நிறுவனம் நாளை ஏலம் விடுகிறது.

இந்த டைரிகளில் பல பயங்கரமான கொடூர கொலை பற்றிய விவரங்கள் இடம் பெற்று உள்ளன.
இந்த டைரியை மெங்கிலே தனது சொந்த கையெழுத்தில் எழுதி உள்ளார். ஆஸ்விட்ச் பிர்கெனு மரண முகாமில் இந்த மரண மருத்துவர் பணியாற்றினார். இவர் நாஜி படையின் மரண தண்டனைகளை நிறைவேற்றக்கூடிய எஸ்.எஸ் என்ற பிரிவில் இருந்தார்.
இவரது டைரிகள் 3 லட்சம் டொலரில் இருந்து 4 லட்சம் டொலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 3 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட மருத்துவர் மெங்கிலேவின் டைரியில் எழுதி இருக்கும் விடயங்கள் உலகை உலுக்குவதாக இருக்கலாம்.
இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பாவை விட்டு வெளியேறிய மெங்கிலே பிரேசிலில் வாழ்ந்தார். அவர் 1979ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
ஒட்டு மொத்த கொலைகளை விபரீதமான சிந்தனைகளில் கொலை  செய்த இந்த நபர் தனது டைரியில் சில கவிதைகளையும் எழுதி உள்ளார்.
கொலைகாரருக்கு கவிதை எழுதக்கூடிய மென்மையான மனம் இருக்குமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த டைரியை தற்போது யார் ஏலத்திற்கு கொண்டு வந்து உள்ளார் என்ற விவரத்தை ஏல நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் லத்தீன் அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய மெங்கிலே பிரேசிலில் ஒரு தண்ணீர் விபத்தில் 1979ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

0 comments:

IP
Blogger Widgets