”மைனா”, ”தெய்வத்திருமகள்” என நல்ல படங்களில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்திருந்தாலும், அமலா பால் நடித்த ஆரம்பப் படமான ”சிந்து சமவெளி” ஆபாசப்படம் என்ற பெயரைச் சம்பாதித்து விட்டது.
மாமனாரை காதலிக்கும் இளம் மனைவியாக அதில் நடித்திருந்தார் அமலா. குடும்ப உறவுகளைச் சீரழிப்பதாகக் கூறி இந்தப் படத்துக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. இந்தப் படத்தில் நாயகியாக அனகா, ஆபாசப் படத்தில் அறுவறுப்பாக நடித்தார் என்று கூறி இவரை சென்னைக்குள் வரவிடாமல் போராட்டமெல்லாம் நடத்தினர். சில நாள் கழித்து ”சிந்து சமவெளி” படம் வந்ததே மக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மறந்துபோனது.
அனகா, அமலா பால் ஆகி மைனாவில் நடித்தார். அந்தப் படம் பிரபு சாலமன் இயக்கத்தாலும் உதயநிதி ஸ்டாலின் விளம்பர உத்தியாலும் பெரிய வெற்றி பெற்றுவிட, அமலா பாலை நோக்கி முன்னணி நட்சத்திரங்கள் வர ஆரம்பித்தனர். இப்போது விக்ரமுடன் நடித்துள்ள ”தெய்வத்திருமகள்” வெளியாகியுள்ளது. அடுத்து ஆர்யாவுடன் நடித்துள்ள ”வேட்டை” வெளிவருகிறது.
இந்த நேரம் பார்த்து தான், அமலா பாலின் ஆபாசப் படமான ”சிந்து சமவெளி” நேற்று முன்தினம் திடீரென வெளியானது. அதுவும் 5 திரையரங்குகளில் மறு வெளியீடு ஆகியுள்ளது. சிந்து என்ற பெயரை பெரிதாகவும் சமவெளி என்ற வார்த்தையை மிகச் சிறியதாகவும் மாற்றி ஏதோ புதிய மலையாளப் படம் போல என்று கருதும் அளவுக்கு பட சுவர் விளம்பரங்களை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
சென்னை முழுக்க ”தெய்வத்திருமகள்” சுவரொட்டிகளும், ”சிந்துசமவெளி” சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அமலா பால் அதிர்ச்சியடைந்துள்ளார். நல்ல படங்களில் நடித்து நல்ல யெர் உள்ள நேரத்தில் என்னை இப்படி பாழ்படுத்தலாமா, என கண்ணைக் கசக்குகிறாராம். |
0 comments:
Post a Comment