அரச ஊடகங்கள் வசம்
தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லயின் ஆலோசனைக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு உரிமையை அரச ஊடகங்கள் வசமாக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படி வானொலி மற்றும் தெலைக்காட்சி நேரடி ஒலி பரப்புக்கள் அரச நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
எனினும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இந்த உரிமையை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும்.

0 comments:
Post a Comment