சீன யுவான் நாணயத்தை இலங்கையில் பயன்படுத்த முடியும்!

Monday, July 18, 2011

மத்திய வங்கி அனுமதி
அனுமதியளிக்கப்பட்ட வங்கிகளில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின்போது சீனாவின் யுவான் நாணயத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது . வங்கிகளில் யுவான் நாணயத்தை பயன்படுத்துவற்கு அனுமதியளிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீடுகளுக்கு உதவும் என மத்திய வங்கி தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்- யூரோ- ஜப்பானிய யென் உட்பட 13 வெளிநாட்டு நாணயங்களிலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதியளிக்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets