இந்திய மத்திய அரசின் சார்பில் வாதம்
சென்னை சூளைமேட்டில் 1986 நவம்பர் மாதத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து- இந்திய நீதிமன்றங்கள் முன் நிறுத்துவது இயலாது என்று இந்திய மத்திய அரசின் சார்பாக நேற்று வாதிடப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது
அவ்வழக்கு விசாரணைக்காக தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்துவரவேண்டும் எனக்கோரும் பொது நல மனு தலைமை நீதிபதி எம் வை இக்பால் மற்றும் நீதிபதி டி எஸ் சிவஞானம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் ரவீந்திரன் -தேவானந்தா ஒரு நாட்டு அமைச்சர் என்ற முறையில்- ராஜாங்க ரீதியான சட்டப் பாதுகாப்பு இருக்கிறதென்றார்.
பொது நல மனு தாக்கல் செய்திருக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஒன்று அமுலில் இருந்தும் 1994 ஆம் ஆண்டிலேயே தேடப்படும் குற்றவாளி என டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டும் அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
அவர் பின்னர் அமைச்சரான பிறகு இந்தியா வந்து போயிருக்கிறார். இந்திய பிரதமரை சந்தித்தும் இருக்கிறார். இந்திய அரசு சட்டத்தை அமுல்படுத்த அக்கறை காண்பிக்கவில்லை என்று குறை கூறினார்.
தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டுக்கு அனுப்பிவைப்பது குறித்த ஒப்பந்தமாகும். ஆனால் அது குறித்த இந்திய இலங்கை ஒப்பந்தம் தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர் அந்நாட்டு அமைச்சர் என்றார் மத்திய அரசு வழக்கறிஞர்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின் மேல் விசாரணை வேறு ஒரு பிரிவுக்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment