புலம்பெயர் தமிழருக்கு அமைச்சர் பசில் அழைப்பு
தமிழ் மக்களின் சுபீட்சத்தி லும் விமோசனத்திலும் உண் மையான அக்கறை கொண் டவர்கள் என்றால் புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் முதலீ டுகளை செய்ய முன்வரவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்~ அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம்இ நெல்லியடி சந்தை திறப்பு உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்ட வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குடிநீர் மற்றும் மின்விநியோகத் திட்டங்கள்- வீதி அபிவிருத்தி வேலைகள் என்பவற்றையூம் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ
யூத்தம் காரணமாக அழிவூற்றுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடமாகாணத்தையூம் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சகல வேலைத்திட்டங்களையூம் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் நிதி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டு தமிழ் மக்களின் சுபீட்சத்திலும்இ விமோசனத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது அம்மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும். இதனை எவரும் மறுக்கமுடியாது.
இதைவிடுத்து தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிநாடுகளில் கூறித்திரிவதால் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையூமே கிடைக்காது. இதனை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து செயற்படுவது மிக அவசியம்.
அரசாங்கம் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகிறது. இந்தவகையில் பலகோடி ரூபா முதலீட்டுடன் உட்கட்டமைப்பு வசதிகள் யாவூம் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன.
உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுவிட்டது. அப்பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.நெல்லியடி சந்தை மிக விரைவில் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்தப்படும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிஇ கல்வியைப்போன்று விவசாயத்துக்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். யாழ்ப்பாணம் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவூகண்டு வருகிறது என்றும் கூறினார்.

0 comments:
Post a Comment