வடக்கில் இராணுவ ஆட்சி என்பது உண்மைக்குப் புறம்பானது!

Monday, July 18, 2011

தகவல் திணைக்கள பணிப்பாளர் விளக்கம்
வடக்கில் இராணுவ ஆட்சி இருக்கும்வரை நீதியான தேர்தலை எதிர்நோக்க முடியாதென இடது சாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியை அரசாங்கம் முற்றாக மறுப்பதாகவூம் அது உண்மைக்குப் புறம்பானதெனவூம் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல தெரிவித்தார்.


மூன்று தசாப்த காலத்தின் பின்னர் வடக்கில் அமைதி நிலவூகின்றது. மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர் இப்போது வடக்கில் புலிகளின் நிர்வாகமும் இல்லை. இராணுவத்தினரின் நிருவாகமும் இல்லை. சிவில் நிருhவகமே வடக்கில் இடம்பெறுகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டுமே இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது தவறான கருத்தாகும்
தேர்தல் காலத்தில் மட்டும் வடக்கில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவில்லை. வடபகுதி எங்கும் இப்போது வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் துரித அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட செயலகங்கள்இ மாகாண சபைகள்இ பிரதேச சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் நாட்டின் ஏனைய பாகங்களில் நடைபெறும் சிவில் நிருவாகமே வடக்கிலும் இடம்பெறுகின்றது.
வடக்கில் உள்ள மக்களின் அன்றாடத் தேவைகளை திட்டமிட்ட அடிப்படையில் சிவில் அதிகாரிகள் நிறைவேற்றி  வருகின்றனர்.
யாழ்ப்பாணம் செல்லும் எவருக்கும் இதனை நேரடியாகக் கணடுகொள்ள முடியூம் என்றும் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முடியூம் எனவூம்தகவல் திணைக்களப் பணிப்பளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets