வடக்கில் மக்கள் அரசுக்கு ஆதரவாகவே உள்ளனர்!

Monday, July 18, 2011

அமைச்சர் சந்திரசேன பெருமிதம்
யாழ்ப்பாணத்திலிருந்து தாஜுதீன்- சுஹைர் ஷெரீப்
வட பகுதி மக்களின் அரசுக்கான ஆதரவூ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சகித்துக்கொள்ள முடியாத எதிர் தரப்பு அரசியல் தலைவர்கள் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டுவருவது வேதனைக்கு உரிய விடயம் என விவசாய சேவைகள்; மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கவலை தெரிவித்தார்.

வடக்கில் இராணுவ ஆட்சி இருக்கும் வரை நீதியாக தோ;தலை எதிர்பார்க்க முடியாதென இடது சாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
நாட்டில் பல பகுதிகளிலும் பாரிய அளவிலான துரித அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற வேளையில் வட பகுதி மக்களின் நன்மை கருதியூம் துரித அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றை சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு ஒரு பெரிய பங்களிப்பாக அமைகின்றது.
இராணுவத்தினரின் இந்த ஒத்துழைப்பை சில அரசியல் தலைவர்கள் தவறான கண்ணோட்டத்தில் அவதானித்து அதனை அரசியலாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் அடைய முயற்சிக்கின்றனர்.
இராணுவ வீரர்களின் இந்தச் சேவையை குறிப்பிட்ட சிலர் தரக்குரைவாக எடைபோடுவது மிகவூம் வேதனைக்குரிய செயலாகும். அது மட்டுமல்லாமல் வட பகுதி மக்களுக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளையூம்  தடை செய்வதற்கான முயற்சியாகவூம் அது அமைகின்றதுஇ
யாழ் மக்களின் இன்றைய இயல்பு வாழ்க்கை பற்றி போதிய தௌpவின்மை காரணமாகவே விக்ரமபாகு கரனாரத்ன இவ்வாறான கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் சிலநாட்களாவது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தால் உண்மை நிலையை புரிந்துகொண்டிருப்பார்.
யார் என்ன முயற்சி செய்தாலும் வட பகுதி மக்கள்; மத்தியில் நிலவூம் அரசாங்கம் மீதான நம்பிக்கையையூம்  நட்புறவையையூம் சீர்குலைக்க முடியாதென்பது தெட்டத் தௌpவானதாகும்.
தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையிட அமைச்சர்கள் பட்டாளம் ஒன்று வடக்குக்குப் படையெடுத்துள்ளதாக விக்ரமபாகு கருணாரத்ன கூறியூள்ளார். ஆனால் வடக்குப் பிரதேசம் கண்டுவரும் துரித அபிவிருத்தி காரணமாக தமிழ் மக்கள் அரசாங்கத்தக்கு அதரவாகவே உள்ளனர். எனவே வாக்குகளை கொள்ளையிடவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரசு மட்டமே சுதந்திரமாகச் செயற்பட்டுவரகின்றதாகவூம் இந்த சூழல் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் ஆதாரமாற்றது. வட பகுதியில் எதிரணிக்கட்சிகளும் தேர்தல் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets