காத்திரமாதொரு தீர்வை பாராளுமன்றத் தெரிவுக்குழுவினாலேயே வழங்க முடியும்!

Monday, July 18, 2011

அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்து
இனப்பிரச்சினைக்கு காத்திரமானதொரு தீர்வை பாராளுமன்றத் தெரிவுக் குழுவினாலேயே வழங்கமுடியும் என பெற்றொலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறினார் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:
இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக நியமிக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவைப் பகிஷ்கரிக்கப்பபோவதாக சில அரசியல் கட்சிகள் கூறிவருகின்றபோதும் இதற்கான காத்திரமான தீரிவை பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால்தான் வழங்க முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக எக்கட்சியையும் அரசாங்கம் அன்றும் ஏற்கவில்லை. இன்றும் ஏற்கப்போவதில்லை.
தீர்வொன்று தேவையாக உள்ளது ஐரோப்பி நாடுகளுக்கல்ல. வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் அல்ல. வடக்கு- கிழக்கில் உள்ள எமது மக்களுக்கே தீர்வொன்று தேவைப்படுகின்றது.
வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதிப்படுத்தும் சகல கட்சிகளையும் சோந்;த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். தமது மக்களின் தேவைகளை நன்கு அறிந்த வைத்துள்ள அவர்கள் தீர்வொன்றை எட்டுவதற்காக சுதந்திரமாக தமது கருத்தைத் தெரிவிக்க இப்போது அவகாசம் கிடைத்துள்ளது.
முன்னர் புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிடப் பயந்தனர். ஆனால் இன்று அந்த நிலை முற்றாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன்மூலம் எமது ஜனாதிபதி அந்த நிலையை மாற்றியமைத்தார்.
இதன் காரணமாக மக்களின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படடுள்ளது. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வூ காண்பதற்கு இன்றைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே மிகவும் பொருத்தமானது என்றும் அமைச்சர் கூறினார்

0 comments:

IP
Blogger Widgets