லியோனல் மெஸ்சி மீது அர்ஜென்டினா ரசிகர்கள் ஆவேசம்

Monday, July 18, 2011

அர்ஜென்டினா அணி கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் வெற்றி பெற லியோனல் மெஸ்சி உதவுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் குரூப் ஆட்டங்களில் மெஸ்சி ஆட்டம் மோசமாகவே இருந்தது. அவரது ஆட்டத்தை பார்த்து அர்ஜென்டினா ரசிகர்களும், பத்திரிக்கைகளும் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். போட்டியை நாம் நடத்துகிறோம். வெற்றி பெற்றே தீர வேண்டும். கிளப்பில் ஆடுவதைப் போல ஓடியாடி விளையாடுங்கள் என ரசிகர்கள் எரிச்சலுடன் கூறியுள்ளனர்.
அர்ஜென்டினா அணி திங்கள் கிழமை நடந்த ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணியை 3-0 கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. நூளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி உருகுவே அணியை எதிர்த்து மோதுகிறது.
லியோனல் மெஸ்சி மீது தொடர்ந்து விமர்சனம் செய்ய வேண்டும். இப்படி அந்த வீரரை நிர்பந்தித்தால் அவர் அர்ஜென்டினா அணியில் ஆடுவதை விட்டுவிடுவார் என அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தலைவர் ஜீலியோ குரோன்டோனா எச்சரித்துள்ளார்.
ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த போதும் அர்ஜென்டினா அணிக்கு உதவ வேண்டும் என மெஸ்சி போராடுகிறார். பார்சிலோனா கிளப்பில் ஆடும் மெஸ்சி தனது தாய் நாடான அர்ஜென்டினா அணிக்கு ஆடுவதை பெருமையாக கருதுகிறார். மெஸ்சி அர்ஜென்டினா ரோசரியோவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

0 comments:

IP
Blogger Widgets