பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் உள்ள மூத்த வீரர்களின் அணுகுமுறை எரிச்சல் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று முன்னாள் கப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கப்டன் யூனிஸ் கான் குறித்து அக்ரம் கூறுகையில், அவர் இருமுறை கப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இது சரியல்ல. ஒரு கப்டனாக இருந்து கொண்டு சிறு சிறு விடயங்களையெல்லாம் பெரிது படுத்துவதா? பிரச்சினையை எடுத்துக் கூறி எதிர்கொள்ள வேண்டும், அதனைக் கொண்டு அஞ்சி ஒளியக்கூடாது.
ஓய்வு பெறுவது பிறகு மீண்டும் வருவது என்பது நகைச்சுவை அல்ல. சில மூத்த வீரர்களின் அணுகுமுறை எனக்கு அலுப்பூட்டுகிறது. இதனால் வாரியமும் எரிச்சலடைகிறது. பாகிஸ்தான் கிரிக்கட்டில் பிரச்சினை என்னவெனில் பயிற்சியாளர் அதிகாரம் வேண்டும் என்று கேட்கிறார். அவர் அணிக்கு பயிற்சி அளித்து கப்டனுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். கப்டனுக்கு மேல் தன்னை பயிற்சியாளர் நினைக்கலாகாது.
இந்திய அணிக்கு கேறி கிறிஸ்டன் 3 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தார். அவர் எப்போதும் பின்னால் இருந்து தான் செயல்பட்டார். அவ்வாறு தான் ஒரு பயிற்சியாளர் இருக்க வேண்டும். கப்டன்கள் அணியை களத்தில் வழி நடத்தும்போது பயிற்சியாளர்கள் ஏன் அதிகாரத்தை நோக்கி விழைகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை என்று தெரிவித்துள்ளார் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் அணியில் மூத்த விரர்களின் அணுகுமுறை குறித்து அக்ரம் அதிருப்தி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment