மும்பை கிரிக்கட் சங்க (எம்.சி.ஏ.) தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்காருக்கு கபில்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்
எம்.சி.ஏ. தேர்தல் இன்று மும்பையில் நடக்கிறது. இதற்கு திலீப் வெங்சர்க்கார், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் போட்டியிடுகின்றனர்.
இதில், வெங்சர்க்காருக்கு ஆதரவு தேடிய கபில்தேவ் கூறியது, கிரிக்கட் அமைப்பின் தலைமை பதவிக்கு கிரிக்கட் வீரர்கள் ஏன் வர முடிவதில்லை என்பது எனக்கு புரியவில்லை. நிதி அமைச்சர் பதவிக்கு கிரிக்கட் வீரர்கள் எப்படி போக முடியாதோ, அதே போல் கிரிக்கட் சங்க தலைவர் பதவிக்கு அரசியல்வாதிகள் வர முடியாத நிலை உருவாக வேண்டும்.
ஏனென்றால் ஒரு கிரிக்கட் வீரரால் தான் அந்த அமைப்பை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இதனால் அரசியல்வாதிகள் அனைவரும் கெட்டவர்கள் என சொல்லவில்லை. மற்ற விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் தலைவர் பதவியில் 80 சதவீத விளையாட்டு வீரர்கள் தான் உள்ளனர். இந்தமுறை வெங்சர்காருக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கிரிக்கட்டை பற்றி நன்கு அறிந்தவர்களால் தான் உற்சாகமாய் அந்த பதவியில் செயல்பட முடியும். இதில் வெங்சர்கார் தலைமையிலான அணி தேர்வு செய்யப்பட்டால் அனைவருக்கும் சிறந்த சேவை புரிவார்கள் என்று கபில்தேவ் தெரிவித்தார்.
இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் திலீப் வெங்சர்க்காருக்கு கபில்தேவ் ஆதரவு
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment