வடக்கில் நடக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பாதுகாப்பு கடமைகளுக்கு பொலிஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்த விதத்திலும் இராணு வத்தினரின் தலையீடு கிடையாது எனயாழ்.கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி உட்பட 16 சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகிறது.இதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். வாக்களிப்பு முறைகள்- வாக்கெண்ணும் நிலையங்கள் என சகல இடங்களிலும் பொலிஸார் சேவையிலீடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் குடாநாட்டின் வழமையான பாதுகாப்பு கடமைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படவூள்ளனர். மேலதிக பாதுகாப்புக்காக படை யினர்களின் உதவி கோரப்பட வில்லை எனவூம் மேஜர் ஜெனரல் ஹதுரசிங்க தெரிவித்தார்.

0 comments:
Post a Comment