யாழ்ப்பாணத்திலிருந்து தாஜுதீன் -சுஹைர் ஷெரீப்- லத்தீப்
சில குழுக்கள் மேற்கொண்டுவரும் தவறான பிரசாரங்களில் தமிழ் மக்கள் ஏமாந்துவிடக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுரை வேலனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-தமிழ் மக்களின் உரிமைகள் அவா;களிடமே இருக்கின்றன. அவற்றை யாரும் அபகரித்துக்கொள்ள முடியாது.
30 வருட அழிவூ காலம் முடிந்து இப்போது வடக்கில் ஜனநாயகம் மலா;ந்துள்ளது. உங்கள் பிரதேசம் தொடர்ந்தும் பின்தங்கிய பகுதியாக இருக்கக் கூடாது. அதனை ஏனைய பிரதேசங்கள் போன்று அபிவிருத்தி செய்ய இப்பிரதேச மக்கள் அரசுக்கு ஆதரவூ வழங்க வேண்டும்.
அரசாங்கத்துக்கு எதிராக பொய்ப்பிரசாரங்களில் ஈடுபடுபவர்களின் பிள்ளைகள் வெளிநாடுளில் இருக்கின்றனர். அவர்களது உறவினர்களும் வெளிநாடுகளில். இவர்களின் பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாந்துபோகாதீர்கள்.
உங்கள் பிள்ளைகள்தான் உங்களது சொத்து. அவர்களுக்கு நல்ல கல்வி புகட்டி அவர்களை முன்னேற்றத்துக்கு கொண்டவருவது உங்கள் பொறுப்பாகும்.
வடபகுதி மிகவூம் வேகமாக அபிவிருத்தியடைந்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும். 30 வருடங்களில் ஏற்பட்ட அழிவை அரசாங்கம் 2 வருடங்களில் நிவர்த்தி செய்துள்ளது.
ஏனைய பகுதிகளைப் போன்று வடக்கிலும் இப்பொது ஜனநாயம் பாதுகாப்பாக உள்ளது. அதனைத் தொடர்ந்தும் பாதுகாத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும் எனவூம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்

0 comments:
Post a Comment