யாழ் செயலகத்தில் நடைபெற்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது கடும் வாக்குவாதம்! (வீடியோ இணைப்பு)

Thursday, July 21, 2011

யாழ் செயலகத்தில் இன்றையதினம் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது கட்சிகளின் பிரதிநிதிகள் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.



1. தீவகத்திற்கு வாக்குகள் போடப்பட்ட வாக்குப் பெட்டிகளை எடுத்து வருவதற்கு பயன்கடுத்தப்படவுள்ள ஹெலிகொப்ரர், கடற்படைப் படகு போன்றவற்றில் கண்காணிப்பாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும்- த.தே.கூட்டமைப்பு

2. நீதியான தேர்தல் நடைபெறுமா என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? என ஜே.வி.பி., த.தே.கூ.வும் கேள்வி.

சனிக்கிழமை இடம்பெறவுள்ள யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நேர்மையான வகையில் தேர்தல்கள் இடம்பெறுமென நம்பிக்கை தமக்கு இல்லை. எம்மால் ஏற்கனவே வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழிகளும் நிறைவேற்றறப்படவில்லை நாட்டின் ஜனாதிபதியும் அவரது அமைச்சர்கள், அதிகாரிகளும் என அனைத்து அரச இயந்திரங்களாலும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுவருதாகவும் தேர்தல் தொடர்பாக எம்மால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை என சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்றும் கூட புதிதாக ஜனாதிபதியினதும், அமைச்சரினதும் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் அலுவலகங்களும் திறக்கப்பட்டே உள்ளது. மேலும் சுவரொட்டிகள், பனர்கள், கட்டவுட்டுகள் கூட இன்றுவரை அகற்றப்படவில்லை. தேர்தல் பணிகளில் தெற்கில் இருந்து வருகை தருகின்ற முந்நூறிற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறானவர்கள் அண்மையில் அரச நியமனம் பெற்ற நிர்வாக சேவையைச் சேர்ந்த 130 சிங்களவர்களும் உள்ளடங்குவதாக அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

இதனை முற்று முழுதாக நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், குறித்தவர்கள் தேர்தல் வாக்கெண்ணும் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க முடியாது எனவும் நீண்ட இழுபறிகளின் பின்னர் தேர்தல் ஆணையாளர் அவர்கள் அந்த பணிகளில் பார்வையாளர்களாக இருப்பார்களே மட்டுமன்றி பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என உறுதி மொழி வழங்கப்பட்டதையடுத்து,முடிவு எட்டப்பட்டிருந்தது.

தீவகப் பகுதிகளில் குறிப்பாக நெடுந்தீவுப் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டிகள் ஹெலிகொப்ரர் மூலம் எடுத்துவரப்படும் எனவும், ஏனைய கடல்வழித் தொடர்புடைய தீவுப் பகுதிகளில் வாக்குப் பெட்டிகள் வாக்களிக்கப்பட்ட பின்னர் கடற்படைப் படகுகளில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பால் இவ்வாறு எடுத்துவரப்படுகின்றபோது தேர்தல் முறைகேடுகள் ஏதும் இடம்பெறக்கூடய சந்தர்ப்பம் உண்டு எனவும் இதனைத் தடுப்பதற்கு தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒருவரையாவது கடற்படைப் படகுகளிலேயோ ஹெலிகளிலேயோ பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

மேலும் ஈ.பி.டி.பி. யினரால் வெளியிடப்படுகின்ற மாலைமுரசு எனப்படுகின்ற புதிய பத்திரிகை சர்ச்சைக்குரிய விடயங்கள் சில தினங்களாக வெளியிடப்படுகின்றமை தொடர்பாக அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவனால் தெரியப்படுத்தப்பட்டதுடன் இந்த மாலை முரசு எங்கு அச்சிடப்படுகின்றது யாரால் அச்சிடப்படுகின்றது என்ற தகவல்கள் அற்று வெளிவருவதாகவும் அது கூட்டமைப்பினரிடையே பிளவுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அது மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கும் வகையில் வெளிவருவதாகவும் குற்றஞ் சாட்டினார்.
இதனிடையே ஈ.பி.டி.பி.யின் நாளிதழான தினமுரசு பத்திரிகையிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி இன்றையதினம் கூட கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததையும் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்ததையும் அவர் எடுத்துக்காட்டினார். இந்த முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென தேர்தல் திணைகள அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

IP
Blogger Widgets