டைரக்டரிடம் செக்கேட்ட கவிப்பேரரசு வைரமுத்து

Sunday, July 24, 2011


'வாகை சூட வா' படத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தின் இயக்குனர் சற்குணம் இருவருடனும் பணியாற்றிய அனுபவத்தை கூறியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.
இந்த படத்தில் வரும் கதையின் நாயகன் வெளியூரில் இருந்து வேலைக்காக கிராமத்துக்கு வந்தவன்.
நாயகி டீக்கடை ஓனர் அவளிடம் மாதக்கட்டணத்திற்கு உணவு தருமாறு' நாயகன் கேட்கிறான். நாயகி அவனை 'சார் சார்' என்று அழைக்கிறாள்.
இதைப்பாடலில் ஒரு இடத்திலாவது கொண்டுவர முடியுமா என்று டைரக்டர் சற்குணம் கேட்டார் பதிலுக்கு 'முடியும் சார்' என்றேன்.
அப்படி உருவான பாடல்தான் 'சர சர சாரைக்காத்து வீசும் போதும் சாரப்பாத்து பேசும் போதும்..சாரைப்பாம்பைப் போல நெஞ்சு சத்தம் போடுதே..'நீங்கள் கேட்டது ஒரு 'சார்' நான் தந்தது மூன்று 'சார்'..அதற்க்கு நீங்கள் கொடுத்த 'செக்' ஒன்றுதான் இன்னும் இரண்டை எதிர்பார்க்கிறேன்.
நான் எழுதி ஜிப்ரான் மெட்டமைத்து பாடல் உருவான விதத்தை விட அது காட்சி அமைந்திருக்கும் விதம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets