கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பிரேசில் அணி 4-2 கோல் கணக்கில் ஈக்வடார் அணியை நேற்று வென்றது.
இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி கால் இறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணி வெற்றிக்கு அலெக்சாண்டரே படோவும், நேமரும் உதவினார்கள். இரண்டு வீரர்களும் தங்கள் பங்கிற்கு தலா 2 கோல்கள் அடித்தனர்.
நேமர் முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் இந்த ஆட்டத்தில் அற்புதமாக பந்தை கடத்தி கோல் அடித்தார். ஈக்வடார் அணி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக அரிதாகவே தவறவிட்டது. ஈக்வடார் அணி அடித்த 2 கோல்களை ஜூலியோ சீசர் தடுத்து நிறுத்தியிருக்க முடியம். ஏனோ தவறவிட்டார்.
கோப்பா அமெரிக்கா இறுதிப்போட்டியில் பிரேசில், அர்ஜென்டினா அணிகள் மோதலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. ஈக்வடார் அணிக்கு 2 கோல்களை பெலிப்பி காய்செடோ அடித்து சமநிலை ஏற்படுத்தினார். இருப்பினும் குரூப் ”பி” யில் முதலிடம் பிடிக்கும் துடிப்புடன் ஆடிய பிரேசில் அடுத்தடுத்து கோல்களை அடித்து மகத்தான வெற்றி பெற்றது.
கோப்பா அமெரிக்கா காலிறுதியில் பிரேசில் நுழைந்தது
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment