தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராகியிருந்த முர்டோக் மீது ஆசாமி ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட்டனில் பல்வேறு தொலைபேசி ஒட்டுக் கேட்பு குற்றச்சாட்டில் சிக்கிய நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை சமீபத்தில் மூடப்பட்டது.
இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையாயினர். இந்நிலையில் நேற்று பிரிட்டன் பாராளுமன்ற எம்.பி.க்கள் கொண்ட தேர்வு கமிட்டி முன்பு நியூஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ரூபர்ட் முர்டோக், இவரது மகன் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் ஆஜராகி பதிலளித்தனர்.
அப்போது டுவிட்டர் இணையதள ஆர்வலர் ஒருவர் திடீரென முர்டோக்கை நோக்கி வேகமாக வந்து அவர் மீது ஷேவிங் கிரீமை எடுத்து மேல் ஊற்றி தாக்கினார். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.




0 comments:
Post a Comment