அதிபர் மாளிகை மீது ராக்கெட் குண்டு வீசித் தாக்குதல்

Wednesday, July 20, 2011

கினியா நாட்டின் அதிபர் இல்லம் மீது கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் அதிபர் மாளிகை பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். இதில் அதிபர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.
ஆப்ரிக்க நாடான கினியா நாட்டின் அதிபராக ஆல்பா கோன்டே(73) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் பதவியேற்றார். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் இவர் தான்.
பிரான்ஸ் நாட்டிடமிருந்து கினியா 1958ம் ஆண்டு விடுதலை பெற்றது. இந்நிலையில் நேற்று தலைநகர் கொனாக்ரேவில் உள்ள அதிபர் இல்லத்தில் நேற்று மாலை கிளர்ச்சியாளர்கள் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் அதிபர் மாளிகை பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பொலிசார் படுகாயமடைந்தனர். அதிபர் ஆல்பா கோன்டே காயமின்றி உயிர்தப்பினார்.
இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் முகமது சையத்போபானா பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை அவசரமாக கூட்டி விவாதித்ததாகவும் ‌தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான பதவி நீக்கம் செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

0 comments:

IP
Blogger Widgets