யாழ். சொகுசு பஸ் சேவை வெள்ளவத்தையிலிருந்தே புறப்படும்!

Monday, July 18, 2011

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து எம்.ஜே.எம். தாஜுதீன் : சுஹைர் ஷெரீப்
கொழும்பில் இருந்து யாழ் புறப்படும் தனியார் சொகுசு பஸ்கள் வெள்ளவத்தையில் இருந்து  சேவையை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியூம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சொகுசு சேவைகளை வெள்ளவத்தைக்குப் பதிலாக புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்தில் இருந்தே ஆரம்பிக்குமாறு பொலிஸார் கட்டளையிட்டுள்ளதாக கூறுவதில் எவ்வித உண்மையூம் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான சொகுசு பஸ் சேவை வெள்ளவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படுவதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகையொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தி மக்களை தவறாக வழிநடத்தக்கூடியதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets