கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களை அரசு முடக்கவில்லை!

Monday, July 18, 2011

தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிக்கை
யாழ்பாணத்திலிருந்து எம்.ஜே.எம். தாஜுதீன்- சுஹைர் ஷரீப்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களை முடக்க அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக வடபகுதி செய்திப் பத்திரிகையொன்றில் வெளியான தகவலை அரசாங்கம் முற்றாக மறுப்பதாகவூம் அதில் எதுவித உண்மையூம் இல்லை எனவூம் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 30 வருடங்களாக வடக்கில் தடைப்பட்டிருந்த ஜனநாயக அரசியல் உரிமைகளை இந்த அரசாங்கமே மீட்டுக் கொடுத்தது.
இதன் அடிப்படையில் இம்மாதம் வடக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவூள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாகச் செயற்பட சகல கட்சிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமைதியான தேர்தலை நடத்த பாதுகாப்புப் படையினர் உறுதிபூண்டுள்ளனர்.
கோரிக்கை விடுக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளுக்கும் எதுவித பேதங்களும் இன்றி உரிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.
ஜனநாயகரீதியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்களே மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets