இந்திய டெஸ்ட் கிரிக்கட் அணி உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளது.
அந்த அணியின் இடத்தைப் பறிப்போம் என இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணி கப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் தெரிவித்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறும் தருணத்தில் ஸ்டிராஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இந்திய அணியை இந்த தொடரில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்களில் வென்றே தீர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் முதலிடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே நன்றாக ஆடி வருகிறோம். எங்களை விட சிறந்த அணி இருப்பதாக கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி சர்வதேச கிரிக்கட்டின் 2000 வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்தியா - இங்கிலாந்து அணிக்ள் இடையே நடைபெறும் 100 வது டெஸ்ட் பந்தயமாகவும் லார்ட்ஸ் போட்டி உள்ளது. இந்த போட்டி எங்கள் பக்கமே உள்ளது என்றும் இங்கிலாந்து கப்டன் ஆணட்ரூ ஸ்டிராஸ் உறுதியாக தெரிவித்தார்.
இந்தியாவின் முதலிடத்தை பறிப்போம்: ஆண்ட்ரூ ஸ்டிராஸ்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment