காசா பகுதிக்கு சென்ற பிரான்ஸ் நிவாரண படகை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தியது

Wednesday, July 20, 2011

பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள். அங்கு சர்வதேச நிவாரண உதவி எதுவும் செல்லாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.

இந்த நிலையில் பிரான்சின் நிவாரண படகை இஸ்ரேல் நேற்று மடக்கியது. அந்த நிவாரண படகு தெற்கு இஸ்ரேலிய துறைமுகமான ஆஷ்டோட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரான்ஸ் படகு சட்டவிரோதமாக ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. பிடிபட்ட பிரான்ஸ் நிவாரண படகு அல்கரமா என்ற பெயர் கொண்டதாகும்.
கடந்த ஜீன் மாதம் இறுதியில் 10 சர்வதேச நிவாரண படகுகள் காசா நோக்கி புறப்பட்டன. இந்த படகில் பிரான்ஸ் படகு மட்டுமே காசா எல்லையை நெருங்கிய நிலையில் இஸ்ரேலிய வீரர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பிரான்ஸ் கொடியுடன் வந்த படகை இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் காசா கடற்கரைக்கு 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச தண்ணீர் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
இஸ்ரேலிய வீரர்கள் கடும் எச்சரிக்கை விடுத்த போதும் காசாவை பிரான்ஸ் நிவாரண படகு நெருங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேலிய ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பு செய்தி தொடர்பாளர் தாகர் அல்-நுனு இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 6 நிவாரண கப்பல்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.
அதன் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்காததற்கும் அவர் குற்றம் சாட்டினார். நிவாரண பொருட்களை கொண்டு வந்த 9 துருக்கி ஆர்வலர்களையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர்.

0 comments:

IP
Blogger Widgets