சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவரான டொமினிக் ஸ்டிராஸ்கான் ஹொட்டல் ஒன்றில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டு பெண் எழுத்தாளரான ட்ரிஸ்டன் பேனன்(வயது 32) என்பவர் ஸ்டிராஸ்கான் தன்னை கற்பழிக்க முயற்சித்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
தற்போது பேனனின் தாயாரான அன்னி மான்சாரெட்(வயது 65) 10 வருடங்களுக்கு முன்பு பாரிஸில் உள்ள ஓர் அலுவலகத்தில் வைத்து ஸ்டிராஸ்கான் தன்னுடன் பாலியல் உறவு கொண்டார் என புதிய குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் ஸ்டிராஸ்கானின் மீதான இந்த குற்றச்சாட்டு அவர் சார்ந்திருக்கும் சோஷியலிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.
ஸ்டிராஸ்கான் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment