சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Thursday, July 21, 2011

ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள்.
சமீப வாரங்களாக எத்தியோப்பியா முகாமில் பல ஆயிரம் சோமாலியர்கள் புகலிடம் தேடி வந்துள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகமை பொதுசுகாதார பிரிவு தலைவர் பால் ஸ்பைகல் கூறுகையில்,"டோலோ அடோ முகாம் நிலைமை மோசமாக உள்ளது" என்றார்.
ஜுன் மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு 7.4 பேர் என ஒரு நாளைக்கு மரணம் அடைவதாக ஐ.நா முகமை தெரிவித்து உள்ளது. அடிப்படைக் கோட்டுக்கு 15 மடங்கு அதிகம் மரணம் ஏற்படுகிறது.
குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
சோமாலியாவில் ஷெகபாப் தீவிரவாத பிரிவினர் நிவாரண உதவிகள் நடைபெற அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நேற்று வேண்டுகோள் விடுத்து உள்ளது.
அல்ஷெகபாப் பிரிவினர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரண உதவிக்குழுக்களை விரட்டி அடித்தனர்.
நிவாரண குழுக்கள் மேற்கத்திய உளவாளிகள் என்றும் கிறிஸ்துவமத நபர்கள் என்றும் அவர்கள் நிராகரித்தனர். தெற்கு மற்றும் மத்திய சோமாலிய பகுதி ஷெகபாப் தீவிரவாதப் பிரிவினர் வசம் உள்ளது.

0 comments:

IP
Blogger Widgets