பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தலிபான் இயக்கம் இரண்டாக பிளவுபட்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் தலிபான் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு செயல்படும் வீரர்கள் பெரும்பாலும் தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுவர். குர்ரம் மலைப்பகுதியில் பஸ்ஸல் சயீத் ஹக்கானி தலைமையில் செயல்படும் குழு தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது.
பள்ளிவாசல் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தற்கொலைப்படை தாக்குதலுக்கு இப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தெஹ்ரிக் இ தலிபான் என்ற பிரதான அமைப்பிலிருந்து பிரிந்து தெஹ்ரிக இ தலிபான் இஸ்லாமி என்ற பெயரில் செயல்பட இக்குழு முடிவு செய்துள்ளதாக ஜியோ தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஹக்கானி தெரிவித்ததாகவும், பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவது, அப்பாவி பொதுமக்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்துவது ஆகியவற்றில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குர்ரம் பகுதியில் மட்டுமின்றி இதைச் சுற்றிய பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களிலும் பயங்கரவாதிகளுக்கு ஹக்கானி பயிற்சி அளித்து வந்தார். இங்கு பயிற்சி பெறுவோரில் பலர் கடத்தப்பட்டு கட்டாயமாக இந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களாவர்.
இவ்விதம் கடத்தப்பட்டவர்களை பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு பணம் வசூலிப்பது அல்லது அவர்களை கொன்று விடுவது இந்த இயக்கத்தின் வழக்கமான செயலாக இருந்தது.
இந்த இயக்கத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் அரசு ஈடுபட்டு அதை செயல்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தெஹ்ரிக் இ தலிபான் இயக்கம் இப்போது ஹக்கிமுல்லா மசூத் தலைமையில் செயல்படுகிறது. அணியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
தலிபான் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment