அர்ஜென்டினாவில் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் உருகுவே அணியும் அர்ஜென்டினா அணியும் மோதின.
பரபரப்பான இந்தப் போட்டியில் உருகுவே அணி பெனால்டி ஷூட்டில் அர்ஜென்டினாவை தோற்கடித்தது.
பெனால்டி ஷூட்டில் அர்ஜென்டினா வீரர் கார்லோஸ் டெவர்ஸ் கோல் அடிக்க தவறினார். இதனால் அர்ஜென்டினா தோல்வியை தழுவி வெளியேறியது. உருகுவே அணியின் நட்சத்திரமாக கோல் கீப்பர் பெர்னான்டோ மஸ்லெரா திகழ்ந்தார்.
பெனால்டி ஷூட்டில் டெவர்சின் ஸ்பாட் கிக்கை தடுத்து நிறுத்தி உருகுவேயை அரை இறுதிக்கு கொண்டு சென்றார். உருகுவே அணி அரை இறுதியில் பெரு அணியுடன் மோதுகிறது. முன்னதாக நடந்த காலிறுதியில் பெரு அணி 2-0 கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் கொலம்பியா அணியை தோற்கடித்தது.
காலிறுதியில் வெற்றி பெற்றது குறித்து உருகுவே கோல் கீப்பர் கூறுகையில், இந்த வெற்றிக்கு உருகுவே தகுதியான அணி. மிகச்சிறந்த ஆட்டம் ஆடியுள்ளோம் என்றார். 10 வீரர்களுடன் எதிர்த்து போராட வேண்டி இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கோப்பா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் உருகுவேயிடம் அர்ஜென்டினா தோல்வி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment