சர்வதேச கிரிக்கட்டை பாதிக்கும் ஐ.பி.எல்.

Monday, July 18, 2011

சர்வதேச கிரிக்கட்டின் தரத்தை ஐ.பி.எல். போன்ற டி20 கிரிக்கட் போட்டிகள் பாதிக்கின்றன என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கப்டன் கிறீம் போலக் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் டி20 கிரிக்கட் கலாசாரத்தில் ஏறத் துவங்கி உள்ளனர். டி20 கிரிக்கட் போட்டியும் வளர்ந்து வருகிறது என கிறீம் போலக் தெரிவித்தார்.
நூற்றாண்டின் சிறந்த தென் ஆப்பிரிக்க வீரர் கிறீம் போலக் என 2000 ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். கிறீம் போலக் டி20 கிரிக்கட்டை பார்த்த மறுநாள் டெஸ்ட் போட்டியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிவேகமாக ஓடுவதை சிறிது குறைப்பதற்கு இது மிக சிறிய நடவடிக்கை என்றும் அவர் நினைத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு டர்பன் நகரில் இந்தியாவை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி 2வது டெஸ்ட்டில் ஆடியது. அந்தப் போட்டியை காண மைதானத்தில் பாதியளவு ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால் வீரர்கள் தங்கள் பணியில் ஈடுபட வேண்டிய இன்னொரு நாள் என்ற வகையிலேயே இருந்தது.
டெஸ்ட் போட்டியில் காணப்பட வேண்டிய வேகத்தை காணவில்லை. சர்வதேச கிரிக்கட்டின் தரத்தை ஐ.பி.எல். போன்ற போட்டிகள் பாதிப்பதை இந்த டெஸ்ட் நிகழ்வு உணர்த்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets