ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணியை இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக் ஸ்டூவர்ட் இந்த ஐ.சி.சி. அணி என்பது ஒரு கொமெடி என்று கிண்டல் செய்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கும் முதல் டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 2000 வது டெஸ்ட் என்பது குறிபிடத்தக்கது.
இதனை கொண்டாடும் விதமாக ஓன்லைன் கருத்துக் கணிப்பு நடத்தி சிறந்த டெஸ்ட் அணியை ஐ.சி.சி. தெரிவு செய்து அறிவித்தது. இதில் 4 அவுஸ்திரேலிய வீரர்கள், 4 இந்திய வீரர்கள், 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், ஒரு பாகிஸ்தானி வீரர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒரு இங்கிலாந்து வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திரங்களான விவியன் ரிச்சர்ட்ஸ், கேறி சோபர்ஸ், மால்கம் மார்ஷல் அல்லது அந்த அணியின் அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட இடம்பெறாதது உலகின் தலைசிறந்த அணியா? என்று ஸ்டூவர்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணி உலகின் தலைசிறந்த அணியா?: அலெக் ஸ்டூவர்ட் கிண்டல்
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment