இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வெல்லும்: ஷேன் வார்ன் கணிப்பு

Monday, July 18, 2011

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெல்லும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கணித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகள் பங்கேற்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21 ம் திகதி துவங்குகிறது. இத்தொடரின் வெற்றி வாய்ப்பு குறித்து சுழல் ஜாம்பவான் வார்ன் கூறியது, டோனியின் இந்திய அணியை விட, ஸ்டிராசின் இங்கிலாந்து அணி வலிமையாக உள்ளது.
இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இதற்காக தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை இவர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் சிறு துரும்பு கிடைத்தாலும் இந்திய வீரர்கள் எழுச்சி பெற்றுவிடுவார்கள். இதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணியினர் கொடுத்துவிடக் கூடாது.
இப்படி அசத்த துவங்கினால் ரசிகர்கள் ஆதரவும் கிடைக்கும். துடுப்பாட்டத்தில் இயான் பெல், அலெஸ்டர் குக், டிராட், ஸ்டிராஸ், பீட்டர்சன் ஆகியோர் கட்டாயம் திறமை வெளிப்படுத்த வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் டிரம்லெட்டின் உயரம், இவரது செங்குத்தான பவுன்சர்கள் இந்திய அணிக்கு தொல்லை தருவது நிச்சயம்.
ஆண்டர்சனின் சுழல் செய்யும் திறன், சுழற்பந்து வீச்சாளர் சுவான் இடம் பெற்றிருப்பது போன்றவை, இங்கிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது. ஆனால், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்குத் தான் சரியான வீரர் இல்லை. மற்றபடி, இங்கிலாந்து அணிக்கு பலவீனம் ஒன்றும் இல்லை என்று வார்ன் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets