மடுத்திருத்தலத்தில் மருதமடு நாயகியின் வருடாந்த திருவிழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று காலை நடைபெறும் திருவிழா கூட்டுத் திருப்பலி யினை சிலாபம்- மன்னார்- யாழ்ப்பாண மறை மாவட்டங்களின் ஆயர்கள் இணைந்து நிறைவேற்றவூள்ளனர்.
மடுத் திருப்பலியின் வருடாந்த திருவிழா கடந்த ஜூன் 23ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி யது. அதனைத் தொடர்ந்து தினமும் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் நேற்றைய தினம் வெஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற்றது.
இன்றைய தினம் காலை 8.00 மணிக்கு திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் மடு மாதாவின் திருச்சொஷரூப சுற்றுப் பவனி இடம்பெறவூள்ளது. நாடெங்கிலுமிருந்து இலட்சக் கணக்கான மக்கள் இம்முறை திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.
சிலாபம் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ்- மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் திருவிழா நிகழ்வூகளில் கலந்துகொண்டு ஆசீர் வழங்கினர்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment