யாழ்ப்பாணத்தில் இருந்து எம்.ஜே.எம். தாஜுதீன்- சுஹைர் ஷெரீப்
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துவிச்சக்கர வண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த பிரசாரத்தின் போது மக்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
அப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினை வீடு திருத்தம்- மின்சாரம்- வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்ததுடன் ஆங்காங்கே மக்களைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

0 comments:
Post a Comment