யாழ். அரசாங்க அதிபர் கருத்து
யாழ்ப்பாணத்திலிருந்து எம்.ஜே.எம்.தாஜுதீன்-சுஹைர் ஷெரீப்
யாழ் மாவட்டத்துக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நீதியானதும் நியாயமானதுமாக நடத்துவதற்கு நல்லதொரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவூம் அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவூம் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
யாழ் மாவட்டத்தில் 3 நகர சபைகள்இ 13 பிரதேச சபைகள் உட்பட 16 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவூள்ளது.
இத்தேர்தலின்போது எவ்வித முறைகேடுகளும் இடம்பெறாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதுகாப்புத் தரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
இத்தேர்தலை சுமுகமான முறையில் நடாத்தி முடிக்க சகல கட்சிகளும் பூரண ஒத்தழைப்பை வழங்கவேண்டும்.
இதேவேளை- நேற்றுவரை எழுத்து மூலமாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவூம் அதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாவூம் அவா; மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment