லண்டன் ஒலிம்பிக்கை பிரிட்டிஷ் தடகள வீரர் இடோவு எதிர்பார்ப்பு

Monday, July 18, 2011

பிரிட்டிஷ் டிரிபிள் ஜம்ப் தடகள வீரர் பிலிப்ஸ் இடோவு, 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் குறித்து மனம் திறந்துள்ளார்.

2012 ம் ஆண்டு ஒலிம்பிக் கனவை எனது சொந்த ஊரில் நிஜமாக போகிறது. அந்த போட்டியை எதிர்பார்த்துள்ளேன் என கூறுகிறார். இந்த 32 வயது தடகள வீரர் 2008 ம் ஆண்டு சீன ஒலிம்பிக் போட்டியின் போது தோல்வியை தழுவினார். அப்போது அவரை நெல்சன் எவோரா வீழத்தினார்.
அந்தத் தோல்வியின் போது எனது அடுத்த கனவு இலக்கு 2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தான் என்று பிலிப்ஸ் இடோவு சபதம் எடுத்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 378 நாட்கள் தான் உள்ளன. தனக்கு பல்வேறு தடைகள் உள்ளன. அந்தத் தடைகளிலிருந்து முதலில் மீள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எனக்கு என்று சில இலக்குகள் இருந்தன. இந்த இலக்குகளை இந்த ஆண்டு அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார். லண்டன் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். எனது தடகளத் திறனும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்கிறார்.

0 comments:

IP
Blogger Widgets