டேவிஸ் கோப்பையில் அவுஸ்திரேலியாவுடன் சுவிஸ் மோத தயார்

Monday, July 18, 2011

சுவிட்சர்லாந்து டென்னிஸ் அணி வருகிற செப்டம்பர் மாதம் அவுஸ்திரேலியா அணியுடன் மோத செல்கிறது.

சுவிட்சர்லாந்து அணியில் உலகின் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் இடம் பெற்றுள்ளார். கடந்த வாரம் சுவிஸ் அணி போர்ச்சுகல் அணியை தோற்கடித்திருந்தது. வெற்றி பெற்ற சுவிஸ் அணியில் ரோஜர் பெடரர் தனது துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
2012 ம் ஆண்டு உலக குரூப் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி ஆடுவதற்கு அவுஸ்திரேலிய அணியுடன் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். செப்டம்பர் மாதம் உலகின் 4 முக்கிய கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த கிராண்ட் சிலாம் டென்னிசில் முக்கிய கவனம் செலுத்தும் பெடரர், யு.எஸ். ஓபன் போட்டி முடிந்த 5 நாட்களில் அவுஸ்திரேலிய டேவிஸ் கோப்பையை பெடரர் எதிர்கொள்கிறார்.
16 கிராண்ட் சிலாம் சாம்பியனான பெடரர் 2003 ம் ஆண்டு அவுஸ்திரேலிய டேவிஸ் கோப்பை வீரர் லெய்டன் ஹெவிட்டிடம் தோற்றார். அந்த ஆண்டில் இருந்து சுவிஸ் அணி இன்னும் அரை இறுதி வரை டேவிஸ் கோப்பையில் முன்னேற முடியவில்லை.
டேவிஸ் கோப்பை போட்டி வருகிற செப்டம்பர் 16 ம் திகதி முதல் 18 ம் திகதி வரை நடக்கிறது.

0 comments:

IP
Blogger Widgets