கனடிய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை: ராணுவ வீரர்கள்

Wednesday, July 20, 2011

கனடா ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதி மொழியை அரசு நிறைவேற்றவில்லை என மூத்த வீரர்களும், போரில் காயம் அடைந்த வீரர்களும் தெரிவித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத பிரச்சனையை ஒடுக்குவதற்கு கனடா வீரர்கள் அங்கு முகாமிட்டு இருந்தனர். இந்த வீரர்கள் தங்கள் பணி முடிந்து இந்த மாதம் 17ஆம் திகதி நாடு திரும்பினர்.
ஏறக்குறைய 950 வீரர்கள் போர் அல்லாத பயிற்சி பணிகளுக்காக ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியான காபூலில் உள்ளனர். நாடு திரும்பிய வீரர்களில் பலர் காயம் அடைந்து இருந்தனர்.
மூத்த வீரர்களுக்கும், காயம் அடைந்த வீரர்களுக்கும் உரிய உதவி அளிக்கபப்படும் என ஸ்டீபன் ஹார்ப்பரின் பழமைவாத அரசு உறுதி அளித்து இருந்தது.
ராணுவ வீரர்களுக்கு உதவி அளிப்பதே தமது அரசின் முன்னுரிமை என்றும் பிரதமர் கூறி இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு 200 கோடி டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு உறுதி அளித்து இருந்தது.
ஆனால் நாடு திரும்பிய வீரர்களுக்கு பழமைவாத அரசு அளித்த உறுதிப்படி நிதி உதவி அளிக்கப்படவில்லை. இது அந்த வீரர்களுக்கு மன புழுக்கத்தையும் வேதனையையும் தந்துள்ளது.
பணியில் ஈடுபட முடியாத மூத்த வீரர்கள் அல்லாத காயம் அடைந்த வீரர்களுக்கு ஆயிரம் டொலர் அதிகரிப்பு திட்டம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது திட்டத்தில் பணி வாய்ப்பு காண முடியாத வீரர்களுக்கு நிதி உதவி அதிகரிப்பும், மூன்றாவது திட்டமாக வீரர்கள் செயல்பட முடியாத நிலைக்கு ஒட்டு மொத்த தொகை என மூன்று வகை திட்ட உதவிகளை கனடா அரசு அறிவித்து உள்ளது.
இந்த மூன்று வகை திட்டங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 129.9 மில்லியன் டொலர் நிதி உதவி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

0 comments:

IP
Blogger Widgets