ராணாவை விட ரஜினி தான் முக்கியம்: தீபிகா படுகோனே உருக்கம்

Thursday, July 21, 2011


பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான தீபிகா படுகோனே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ”ராணா” படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.
ரஜினியின் உடல் நிலையின் காரணமாக ”ராணா” படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
ராணாவுக்காக கொடுத்த திகதியை மறந்து விட்டு, தீபிகா வேறு இந்தி படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என்று கொலிவுட் அலசியது. நான் பெங்களூரு பெண். மொடலிங் பண்ணிய போதே கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தது.
பாலிவுட் படத்தில் நாயகியாக நடித்து, தற்போது முன்னணி நாயகியாக உள்ளேன். பாலிவுட்டில் பிசியாக இருந்ததால் மற்ற மொழி படங்களில் நடிக்க சரியான சந்தர்ப்பம் அமையாமல் போனது. இந்தியில் டெஷி பாய்ஸ், காக்டெயில், ஆரக்ஷன் ஆகிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினேன்.
”ராணா” படத்துக்காக ரஜினி சாருடன் நடிக்க காத்திருக்கவும் தயாரானேன். என்னை பார்க்கின்றவர்கள் அடிக்கடி, நான் ரஜினி சாருடன் நடிக்கும் ”ராணா” பற்றி விசாரித்தார்கள். எனக்கு ரஜினி சாரின் உடல் ஆரோக்கியம் தான் பெரிதாக தெரிந்தது. அவர் உடல் நலமாகி வரும் வரையில் காத்திருப்பதென முடிவெடுத்தேன்.
ரஜினி சாரின் மகள், படத்தயாரிப்பாளர் சௌந்தர்யா உடன் நான் ராணா படம், ரஜினி சார் உடல்நிலை பற்றியெல்லாம் நிறைய தடவை விசாரித்துள்ளேன். என் சினிமா வாழ்க்கையில் ”ராணா” மிகவும் முக்கியமான படம். அதனால் என் திகதிகளை சரிசெய்து நடித்து கொடுக்க தயாராக உள்ளேன். ரஜினி மாதிரி மதிப்பு வாய்ந்த நடிகரோடு நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம் தீபிகா படுகோனே.

0 comments:

IP
Blogger Widgets