யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் தேர்தல் வன்முறைகளைப் பதிவு செய்வதற்காக புதிய தேர்தல் முறைப்பாட்டு அலுவலம் ஒன்று ஜூலை மாதம் 1 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
வன்முறையற்ற தேர்தலை யாழில் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனும் பாதுகாப்பு தரப்பினருடனும் நேற்று
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை ஊர் ஊராக நடத்தி வருவதுடன் சுயேட்சைக் குழுவினர் தமது தேர்தல் பிரச்சார சுவரோட்டிகளை பிரதேச ரீதியாக பலவராக ஒட்டிவருகின்றனர் என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment