பிளெட்சர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விடயம்: இயான் பெல்

Thursday, July 21, 2011

இங்கிலாந்து கிரிக்கட் அணி பற்றி நன்கு அறிந்த பிளெட்சர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பது சாதகமான விடயம் என்று இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் இயான் பெல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி லண்டனில் வியாழக்கிழமை (ஜூலை 21) தொடங்குகிறது. இது குறித்து பெல் செய்தியாளர்களிடம் கூறியது, இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள ஜிம்பாப்வேயின் பிளெட்சர், முன்பு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவருக்கு இங்கிலாந்து அணி பற்றி முழுமையாகத் தெரியும். இது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்தில் எவ்வாறு விளையாட வேண்டும், பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அவரால் சிறப்பாக வழிகாட்ட முடியும். இப்போது கிரிக்கட் தொழில்நுட்ப ரீதியாக அதிகம் முன்னேறிவிட்டது. விடியோ மூலம் ஒவ்வொரு வீரரின் ஆட்டமுறையையும் எதிரணியினர் துல்லியமாக அறிந்து கொண்டு பந்து வீசுகிறார்கள். துடுப்பாட்ட வீரர்களும் விடியோ மூலம் தங்களது தவறுகளை அறிந்து திருத்திக் கொள்கின்றனர்.
இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது. எனினும் அவர்களை எதிர்கொள்வதில் எங்களுக்கு எவ்வித பதற்றமும் இல்லை. இந்திய அணியுடன் விளையாட மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets