இந்தியா அறிவிப்பு
இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழும் பணிகள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த அகழ்வுப்பணிகளின்போது எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வர்த்தக ரீதியான உற்பத்திக்கு குறைந்தது இன்னும் ஆறு வருடங்கள் செல்லும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையின் மன்னார் வடமேற்குக் கரையோரப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதற்கான எட்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு இடங்கள் சீனா மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“நாம் மூன்று கிணறுகளைத் தோண்டவுள்ளோம். கிணறுகள் தோண்டப்பட்டு நான்கு மாதங்களில் இப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதா என்பதை எங்களுக்குக் கூறமுடியும். அப்படியிருக்கும் பட்சத்தில் இப்பகுதியில் எவ்வளவு எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதென்பதை மதிப்பிடுவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் வரை செல்லும். அப்படி எண்ணெய் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் வர்த்தக ரிதியான உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஆறு வருடங்கள் வரை செல்லும்| என இந்திய அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளா;
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment