உத்தியோகபூர்வ முடிவூகளை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிடும்!

Sunday, July 24, 2011

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவூகளை ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளையூம் அரசாங்க தகவல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் முடிவூகள் தேர்தல் ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே அவை தமது கையொப்பத்துடன் சகல ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல தெரிவித்தார்.
தேர்தல் முடிவூகளை உடனுக்குடன் வெளியிட 7 தொலைக் காட்சி நிறுவனங்கள்- 18 வானொலி நிலையங்கள்- ஆகியவற்றின் பிரதிநிதிகள் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் தற்காலிக ஒலி-ஒளிபரப்பு நிலையங்களை அமைத்துள்ளன.
170 ஊடகவியலாளர்கள் உட்பட மொத்தம் 280 உத்;தியோகஸ்தர்களுக்கு தொலைபேசி- தொலை நகல் வசதிகளும் சிற்றுண்டி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவூம் பணிப்பாளர் நாயம் மேலும் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets