டிராவை நோக்கி இந்தியா - சோமர்செட் அணி பயிற்சி போட்டி

Monday, July 18, 2011

சோமர்செட் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் திணறல் துவக்கம் தந்தனர்.

இப்போட்டி ”டிரா”வாகும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 21 ம் திகதி லார்ட்சில் துவங்குகிறது. இதற்கு முன்னதாக இந்தியா, சோமர்செட் அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி போட்டி டான்டனில் நடக்கிறது.
”டொஸ்” வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த சோமர்செட் அணிக்கு ஸ்டிராஸ் (78) சூப்பர் துவக்கம் கொடுத்தார். இதன்பின் சுப்பையா (156), காம்ப்டன் (88) இணைந்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் இன்னிங்சில், சோமர்செட் அணி 3 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோன்ஸ் (51), ஜேம்ஸ் (30) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா, ரெய்னா, ஸ்ரீசாந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் முகுந்த் (18), காம்பிர் (21), டிராவிட் (17) ஏமாற்றம் அளித்தனர். முதல் இன்னிங்சில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (14), ரெய்னா (1) அவுட்டாகாமல் இருந்தனர். சோமர்செட் அணி சரல் 4 விக்கெட் கைப்பற்றினார்.

0 comments:

IP
Blogger Widgets