ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம்

Monday, July 18, 2011

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே அறிவித்தபடி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் நேற்று முதல் வெளியேறத் துவங்கி விட்டன.

முதற்கட்டமாக பாமியான் பகுதி பாதுகாப்பை ஆப்கன் படையினரிடம் நேட்டோ ஒப்படைத்தது. ஆப்கனில் இருந்து இந்தாண்டு ஜூலை முதல் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வெளியேறும்.
2014க்குள் ஒட்டுமொத்த படைகளும் வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அறிவிப்புக்குப் பின் ஆப்கனில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வந்தது.
இதனால் அமெரிக்கப் படைகள் வெளியேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் தான் சொன்னபடி படைகள் வெளியேறும் என ஒபாமா அறிவித்தார்.
அதன்படி நேற்று ஆப்கனின் பாமியான் பகுதி பாதுகாப்பை ஆப்கன் பாதுகாப்புப் படையினரிடம் நேட்டோ ஒப்படைத்தது. இதற்கான விழா பாமியானில் நடந்தது.
பாதுகாப்புக் கருதி இடம், நேரம் ஆகியவை அறிவிக்கப்படவில்லை. நேரடி ஒளிபரப்பும் அனுமதிக்கப்படவில்லை. காபூல், ஹெல்மாண்டு, பன்ஜ்ஷிர் ஆகிய மாகாணங்கள், லஷ்கர் கா, மஜார் இ ஷரீப், ஹெராட் ஆகிய நகரங்களின் பாதுகாப்பும் விரைவில் ஆப்கன் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

0 comments:

IP
Blogger Widgets