கடற்தாவரங்களை வளர்க்கும் சுயதொழில் திட்டம்!

Monday, July 18, 2011

ஜப்பான் உதவியுடன் வடக்கில் அமுலாகும்
யாழ் மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட கடற்கரையோரப் பிரதேசங்களில் கடற்தாவரங்களை வளர்க்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - ஐப்பான் நாட்டு பிரதிநிதிகளுடன்  யாழ். மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளில் கடற்தாவரங்களை பயிரிடுவது தொடர்பாகக் கலந்துரையாடினர்.

அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது
இவ்வாறான கடற்தாவரங்களை உற்பத்தி செய்து அவற்றை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் கடற்றொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தலா இருபது ஆயிரம் ரூபா இலாபம் ஈட்டக் கூடியதாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பிட்ட ஜப்பான் நிறுவனத்துடன் இலங்கை கடற்றொழில் அமைச்சின் ஆராய்ச்சி பிரிவு (என்.ஏ.ஆர்.ஏ.) இணைந்து இத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளது.
இதன் போது இவ்வாறான கடற்தாவரங்களைப் பயிரிடும் போது ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக துறைசார்ந்தோரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்து கொண்டார்.
புங்குடுதீவு வேலணை  காரைநகர் வலைப்பாடு மற்றும் கிராஞ்சி ஆகிய பகுதியின் கடற்கரைப் பகுதிகள் இவ்வாறான கடற்தாவரங்களை உற்பத்தி செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் பிரதிநிதிகள் இப்பிரதேசங்களுக்குச்; சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

IP
Blogger Widgets