பூநகரியில் ஜனாதிபதி
அரசாங்கத்துக்கு எதிராக வெளிநாடுகளில் அநாவசியமான பிரசாரங்களுக்கு செலவிடப்படும் பணத்தை வடபகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். பூநகரியில் 73.5 பில்லியன் ரூபா செலவில் புதிய பல்தொகுதி மருத்துவமனையை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:
பூநகரி மருத்துவமனை புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அதனை பல மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக நிர்மாணிக்கவூள்ளது. இதேபோன்று வடபகுதியில் பாதிக்கப்பட்ட ஏனைய மருத்துவமனைகளையூம் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வடபகுதி மக்கள் கடந்த 30 வருட கால யூத்தத்தால் அனுபவித்த துன்பங்களை நான் நன்கு அறிவேன். 30 வருடங்கள் பின்தங்கியிருக்கும் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கையையூம் எடுத்துள்ளது.
வடக்கிற்கு நீர்- மின்சாரம்- பிரதேச பாதைகள்- நெடுஞ்சாலைகள்- பாடசாலைகள்- வீடமைப்புத் திட்டங்கள் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் பாரிய அளவில் முன்னெடுத்து வருகிறது.
எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும். ஏனைய மாகாணங்களைவிட யூத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் அபிவிருத்திக்கே அரசாங்கம் அதிகளவான நிதியை செலவீடு செய்துள்ளது.
இவ்வாறான சு+ழ்நிலையில் தமிழ் மக்களை சிலர் தவறாக வழிநடத்த முயல்கின்றனர். இவ்வாறானவர்கள் மக்களுக்கு எதையூம் செய்யவில்லைஇ அரசாங்கமே அனைத்து அபிவிருத்திகளையூம் செய்து வருகிறது. எமது அமைச்சர்கள் கடந்த ஒரு வாரமாக வடக்குக்கு விஜயம் செய்து புதிதாக பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
வடபகுதி மக்கள் பயம் சந்தேகம் இன்றிவாழ முடியூம். இம்மக்களின் முன்னேற்றத்துக்கான சகல வசதிகளையூம் பெற்றுக்கொடுத்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பயங்கரவாதத்துக்கு இனிமேல் இடமில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுப்போம்.
தமிழ் மக்கள் என்னை நம்பலாம். நான் உங்களை நம்புகிறேன். நான் உங்களின் நண்பனாகவூம்- உறவினராகவூம் இருப்பதால் என்னை நீங்கள் நம்பலாம். உங்களுக்காக சகல தேவைகளையூம் நான் பெற்றுக்கொடுப்பேன். வடக்கின் வசந்தம் உங்களின் வசந்தம். வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம் என்றும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
வடமாகாண அபிவிருத்திக்கே அரசு அதிக நிதியை செலவீடுகின்றது!
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment